disabled rightclick


மணலிகீரை நன்மைகள்

மணலிகீரை நன்மைகள் 

மணலிக் கீரையானது பூண்டு இனத்தைச் சேர்ந்த ஒரு கீரையாகும். மணலி கீரைக்கு மணல்கீரை, நாவமல்லிக்கீரை என்ற பெயர்களும் உண்டு. மணலி கீரையின் இலை, தண்டு, வேர் என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. நம் முன்னோர்கள் பட்டியலிட்டுள்ள முக்கியமான மருத்துவக் கீரைகளில் மணலிக் கீரையும் ஒன்று. இது தென்னிந்தியா முழுவதும் பரவிக் காணப்படும் கீரை வகையாகும்.
மணலிகீரை மருத்துவ பயன்கள்

1. மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

2. மணலிக் கீரையை காயவைத்து பின்பு பொடியாக்கி, தினமும் காலை, மாலை 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் மன உளைச்சல், மன அழுத்தம், மனநலக் கோளாறுகள் குணமாகும்.

3. மணலிக்கீரையை மசியல் செய்து சாப்பிட்டால் ஞாபக மறதி கோளாறுகள் ஏற்படாது.
 
4. மணலிக் கீரை சாறில் உலர்ந்த திராட்சையைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

5. மணலிக் கீரையுடன், மிளகு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் மூக்கில் இருந்து நீர் கொட்டுதல் சரியாகும்.

6. மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு அரைத்து பின்பு அதில் சிறிதளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும்.

7. மணலிக்கீரையை வதக்கி சாப்பிட்டால் மூளை நரம்புகள் பலப்படும்.

8. மணலிக் கீரை, துளசி, வில்வம் இவை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் இரவு 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை ஏற்படாது.

9. மணலிக் கீரைச் சாற்றில் திப்பிலியை ஊறவைத்து அதை உலர்த்திப் பொடியாக்கி காலை, மாலை இருவேளையும் 2 கிராம் வீதம் சாப்பிட்டு வந்தால் சைனஸ் பிரச்சனை குணமாகும்.

10. மணலிக் கீரையை மிளகு, பூண்டு, மஞ்சள், ஓமம் ஆகியவற்றோடு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள், வாத வலிகள் போன்றவை குணமாகும்.

11. மணலிக் கீரையுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, பனை வெல்லம் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் போல காய்ச்சி குடித்தால் மார்பு சளி நீங்கும்.

Reviews and Comments

Post a Comment

Popular Posts