disabled rightclick


நீரிழிவு நோய்க்கு வாழ்க்கை முறை

நீரிழிவு நோய்க்கு வாழ்க்கை முறை 

சித்தர்கள் கூறும் உணவுப் பழக்கங்களை சிறு வயது முதலே கைக்கொண்டு வந்தால் சர்க்கரை நோய் அண்டாது.

வாரம் இரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல், தினமும் இரு முறை மலம் கழித்தல், வருடம் இரு முறையாவது பேதி மருந்து குடித்தல் போன்ற வழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டாலே சர்க்கரை நோய் அண்டாது.

35 வயது வரை எந்த விதமான உணவுப் பழக்கங்களையும் மேற்கொள்ளலாம் என்பதும் 35 வயதிற்குப் பின் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வந்து 40, 50 வயது வந்த பின் சர்க்கரையை சுத்தமாக விட்டு விட வேண்டும் என்பதே சித்தர்களின் அறிவுரை.

50 வயதிற்குப் பின் நெய் சேர்த்துக் கொள்வதும் தவறே. கீரை உணவுகளை தினமுமே அல்லது வாரம் இருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

இத்தகைய உணவுக் கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்தாலும் பூர்வ ஜன்ம வினைகளால் அபூர்வமாக சிலருக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதுண்டு.

அத்தகையோர் பழைய சாதத்தைப் பிழிந்து தண்ணீரைக் கொட்டி விட்டு அந்த சாதத்தில் குழம்பு, ரசம், காய் கறி எதை வேண்டுமானாலும் சேர்த்து உண்ணலாம்.

காலையில் ஆராக் கீரையை சமைத்து உண்ணவும். அருகம்புல்லை சோற்றுக் கஞ்சியுடன் சேர்த்து அரைத்து அம்மியில் வைத்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி வெயிலில் உலர்த்தி காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டு இந்த உருண்டையில் ஒன்றை காலையில் வெறும் வயிற்றில் போட்டு சிறிது நீர் அருந்தவும்.

இரவில் சப்பாத்தி அல்லது கோதுமை சோறு உண்ணலாம். இந்த உணவு முறைகளை நடைமுறைப்படுத்தி வந்தால் நிச்சயமாக எவரும் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயால் வருந்த மாட்டார்கள்.

நீரிழிவு நோய் ஒரு வேளை அவர்களைத் தாக்கினாலும் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படாது, அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்பதே சித்தர்கள் அளிக்கும் உறுதிப்பாடு.

Reviews and Comments

Post a Comment