disabled rightclick


சித்தர்கள் அருளிய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து

சித்தர்கள் அருளிய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து

சித்தர்கள் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் போன்ற மருந்தை அருளியுள்ளார்.

தேவையான பொருட்கள்

வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், 
தூதுவளை 50 கிராம், முசுமுசுக்கை 50 கிராம், சீரகம் 50 கிராம் 

செய்முறை

இவற்றை பொடியாக வாங்கிக் கொள்ளலாம் சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும். இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

உண்ணும் முறை

தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு மேசைக்கரண்டி  கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.

இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்.

Reviews and Comments

Post a Comment

Popular Posts