disabled rightclick


பலாக்கொட்டை பயன்கள் மற்றும் நன்மைகள்

பலாக்கொட்டை பயன்கள் மற்றும் நன்மைகள் :

செரிமான ஆரோக்கியம். பார்வை ஆரோக்கியம். இரத்த உறைவு அபாயத்தை குறைக்கிறது. பாலியல் ஆரோக்கியம். தசைகளை பலப்படுத்த உதவுகிறது. பிரீ ரேடிகல்களை குறைக்கிறது. முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. கொழுப்பை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது :

பலாக்கொட்டையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், நுண்னூட்ட சத்துக்கள் மற்றும் புரத சத்து நிரம்பியுள்ளன. அவை தோல் நோய்களிலிருந்து பாதுகாக்கவும், இரத்த சோகைக்கு கூட சிகிச்சையளிக்கவும், கண் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகின்றன.

பலாக்கொட்டையில் உள்ள சத்துக்கள் :

100 கிராம் பலாக்கொட்டையில் சுமார் 185 கலோரிகள் உள்ளன. இதில் 7 கிராம் புரதம், 38 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 1.5 கிராம் நார்ச்சத்து மற்றும் 1 கிராமுக்கும் குறைவான கொழுப்பு உள்ளது.

பலா கொட்டை தியாமின் மற்றும் ரைபோஃப்ளேவின் ஆகிய வைட்டமின்களின் சிறந்த மூலமாகும். அவற்றில் துத்தநாகம், இரும்பு, பொட்டாசியம், தாமிரம் மற்றும் மாங்கனீசு ஆகிய தாதுசத்துக்களும் உள்ளன.

மேலும் சபோனின்கள் போன்ற பைட்டோ கெமிக்கல்கள் போன்ற சத்துக்களும் உள்ளன.

பலாக் கொட்டை பயன்கள் :

பலா விதைகளில் நிறைந்துள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் ஆரோக்கித்திற்கு இன்றியமையாததாகும்.

உடலில் போதுமான அளவு இரும்பு சத்து இருப்பது இரத்த சோகைக்கு சிகிச்சையளித்து, பல இரத்தக் கோளாறுகளைத் தடுக்கிறது.

மேலும் இது இரத்த சோகையின் அறிகுறியான உடல் பலவீனத்தையும் எதிர்த்துப் போராடுகிறது.

செரிமான ஆரோக்கியம் :

பலாப் பழ கோட்டையை காய வைத்து பொடி செய்து மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகிறது.

இதில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கின்றன. மேலும் பலா விதைகள் வயிற்றுப்போக்குக்கும் மருந்தாக பயன்படுத்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், இதை உறுதி செய்யும் அளவிற்கு போதுமான ஆராய்ச்சி தகவல்கள் இல்லை.

பார்வை ஆரோக்கியம் :

இந்த விதைகளில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது பார்வை ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் ஏ குறைபாடு மாலைக் கண் போன்ற பார்வை குறைபாடுகளை ஏற்படுத்தும்.

மேலும் இவை கண்புரை மற்றும் மாகுலர் சிதைவைத் தடுக்க உதவிகிறது.

இரத்த உறைவு அபாயத்தை குறைக்கிறது. பலா விதையில் உள்ள மாங்கனீசு இரத்த உறைதலை ஒழுங்குபடுத்துகிறது என்று சொல்லப்படுகிறது.

பாலியல் ஆரோக்கியம் :  

ஆசிய நாடுகளில் பலா விதைகள் பாரம்பரிய மருத்துவத்தில் பாலியல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப் படுகின்றன.

தசைகளை பலப்படுத்த உதவுகிறது :
பலா விதைகளில் உள்ள புரதச் சத்து தசைகளை உருவாக்க உதவும். ஆனால் அவை பிற தரமான புரத மூலங்களுக்கு மாற்றாக இருக்க வாய்ப்புகள் குறைவு.

இருப்பினும் உணவில் பலா விதைகளை சேர்ப்பதன் மூலம் புரத சத்தை பெறலாம்.

பிரீ ரேடிகல்களை குறைக்கிறது. பலா கொட்டைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், முன்கூட்டிய முதுமையை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, சுருக்கங்களைக் குறைக்க உதவுகின்றன.

முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது :

பலா கொட்டையில் உள்ள வைட்டமின் ஏ முடிக்கு வலுஊட்டி முடி உடைவதைத் தடுக்கிறது. வஇதில் உள்ள தாவர அடிப்படையிலான புரதச்சத்து முடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

இதில் உள்ள இரும்பு உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான கூந்தலுக்கு பங்களிக்கும் மற்றொரு வழியாகும். மேலும் இந்த விதைகளில் புரதங்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. மன அழுத்தம் முடி உதிர்வுக்கு மற்றொரு காரணம் ஆகும்.

கொழுப்பை குறைக்கிறது :

பலாக் கொட்டையில் உள்ள நார்ச் சத்து, கரோட்டினாய்டுகள், பீனாலிக் அமிலம் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிரைந்துள்ளன. எனவே, பலாப்பழ கொட்டைகளை உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், இதய நோய்கள் வராமல் இருக்கவும் உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது :

கார்போஹைட்ரேட்டுகள், புரதம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ரிபோஃப்ளேவின், தயமின், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சில முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால் பலாப்பழ விதைகளை உட்கொள்வது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நல்ல ஊக்கத்தை அளிக்கும்.

Reviews and Comments

Post a Comment